தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில அளவிலான பயிற்சி பட்டறை
கேரளா தேக்கடியில் வைத்து ஜூலை 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது....
இதில் மாநில தலைவர் திருமிகு வெ மகேந்திர குமார் தலைமையிலும், பொதுச் செயலாளர் திருமிகு ஆ. பிரபு மற்றும் பிரச்சாரச் செயலாளர் திருமிகு க கணேஷ்குமார் முன்னிலையிலும் தமிழ்நாடு நில அளவை துறை கூடுதல் இயக்குனர் திருமிகு அ. கண்ணபிரான் அவர்கள் ரிப்பன் வெட்டி பயிற்சி பட்டறை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒன்றியத்தின் தலைவர் மரியாதைக்குரிய ஆற்றல் பெருந்தகை திருமிகு த அமிர்த குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற எண்ணற்ற சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்பு கலந்து கொண்டு சிறப்பு உரையாடினர்
சங்கத்தின் மேனாள் தலைவர்கள் வாழ்த்துரை வழங்க ஒன்றியத்தின் துணைத் தலைவர் திருமிகு மு. சரவணன் குமரன் ஒன்றியத்தின் தேனி மாவட்ட தலைவர் திருமிகு ஜெ.குபேந்திர செல்வம் ஒன்றியத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் திருமிகு பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க சங்கத்தின் மாநில பொருளாளர் திருமிகு தங்க .செல்வம் நன்றி தெரிவித்து நன்றி உரை நிகழ்த்தினார் ..
விழாவில் வையத்தலைமை கொள் என்ற தலைப்பில் ஆளுமை குறித்து ஒன்றியத்தின் மேனாள் தலைவர் திரு இரா சண்முகராஜன் அவர்களும், நில அளவைத் துறை நிர்வாகம் குறித்து நில அளவைத் துறையின் துணை இயக்குனர் திருமிகு சீனிவாச ராகவன் அவர்களும், சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திருமிகு சு கார்த்திகேயன் தலைமையில் பட்டிமன்றமும் , நில அளவைத் துறையில் உள்ள அடிப்படை விதிகள் குறித்து , நில அளவை துறையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் திருமிகு சுந்தரராஜன் அவர்களும், நில அளவை துறையின் தொன்மையும் போராட்டங்களையும் குறித்து சங்கத்தின் மேனாள் தலைவர் திருமிகு பாவலர் மு பசுலுதீன் அவர்களும் அன்றாட வாழ்வில் யோகக் கலை யோகா மாஸ்டர் திருமிகு பாலசுப்பிரமணியன் அவர்களும், உடல்நலம் பேணுதல் குறித்து திருவாளர்கள் குமார் மற்றும் ஷீபா அவர்களும், தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கமும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும் என்ற தலைப்பில் ஒன்றியத்தின் மேனாள் பொதுச் செயலாளர் திருமிகு அ. தேவேந்திரன் அவர்களும் நில அளவை துறை தேனி மாவட்டத்தில் என்ற தலைப்பில் சங்கத்தின் மேனாள் தலைவர் திருமிகு க ராசகோபால் அவர்களும் TNSDOA அனைத்து மாவட்ட தலைவர்களும் தங்களுடைய வெளிப்படையான கருத்துக்களுடன் விழா சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் முத்தாய்ப்பாக கேரளா தேக்கடி மலை பாங்கானஇடத்தில் வைத்து சிறப்பான ஒரு ஏற்பாடு செய்து பயிற்சி நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மாநில பிரச்சார செயலாளர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த க கணேஷ்குமார் தேனி மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள சிறப்பான உணவு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து அளித்து சிறப்பான சங்கத்தை அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்ல, புதிய உச்சத்தை தொட உறுதுணையாக இருந்தனர் என்பதை இந்த நேரத்தில் சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்டு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த இருபால் உறுப்பினர்களுக்கும் மாநில மையத்தின் சார்பாகவும் மாவட்ட மையங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...
இதுபோல் வருடத்திற்கு ஒரு மாநில அளவிலான பயிற்சி பட்டறை , மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறைகளும் வருங்காலத்தில் இந்த பயிற்சி பட்டறையில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை நீக்கி வெற்றிகரமாக நடத்தப்படும்...
****